என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர் பலி"
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் தோட்டம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி சேகரன். இவரது மகன் அரவிந்த் (வயது 23). இவர் சேலத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்தார்.
இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை இவர் புதுவை சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
கவுண்டன்பாளையத்தில் வந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரவிந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தடுமாறி விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த அவரது நண்பர் அசோக் உடனடியாக அரவிந்தை மீட்டு அருகில் உள்ள கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரவிந்த் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
விருதுநகரைச் சேர்ந்தவர் மரகதவேல் (வயது 41). இவர் தனியார் எண்ணை நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் திலீபன் (29), கலைராஜன் (49), ஆரோக்கியராஜ் (27). இவர்கள் 4 பேரும் 4 சக்கர வாகனத்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்காக காரில் மதுரை வந்தனர்.
பின்னர் விருதுநகருக்கு புறப்பட்டனர். திருமங்கலத்தை அடுத்த ராயபாளையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி மரகதவேல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 35). இவர் புதுவை மடுகரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை பணி முடிந்ததும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பர் வேணு (29) உள்ளிட்ட மற்றொருவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிளை அரிகிருஷ்ணன் ஓட்டி சென்றார். மடுகரை- சொர்ணாவூர் ரோட்டில் சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற மின் கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத் தினர் அரிகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கர்நாடக மாநிலம் பெங்களூர் டாக்டர் சிவராம்நகரை சேர்ந்தவர் தாமஸ் (வயது 64). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு இருதய பாதிப்பு இருந்து வந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தாமஸ் கேரள மாநிலம் ஆலப்புலாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் தாமஸ் தனது மனைவியுடன் ஆலப்புலாவுக்கு சென்றார். சிகிச்சை முடிந்ததும் நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
ஆலப்புலாவில் இருந்து எஸ்வந்பூர் நோக்கி சென்ற ரெயிலில் எஸ். 7 பெட்டியில் ஏறினார். ரெயில் இன்று அதிகாலை கோவை அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென தாமசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து ரெயில்வே டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் கோவை ரெயில்நிலையத்துக்கு வந்ததும் டாக்டர் ரெயில் பெட்டிக்கு சென்று சோதனை செய்தார்.
அப்போது தாமஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாமஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்